Published : 08 Jan 2022 06:17 AM
Last Updated : 08 Jan 2022 06:17 AM

2-வது டெஸ்டில் தோல்வி ஏன்? - பயிற்சியாளர் திராவிட் விளக்கம்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 240 ரன்கள்இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றியை வசப் படுத்தியது. இந்த வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது. தோல்வி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியதாவது:

ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் இரு அணிகளுக்குமே சவாலா னதுதான். ஆடுகளத்தின் தன்மை ஒவ்வொரு நாளும் மாறியது. தென் ஆப்பிரிக்க அணி தங் களுடைய 4-வது இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்தார்கள். ஒரு பேட்டிங் குழுவாக சில முக்கிய தருணங்களைக் கைப் பற்றி பார்ட்னர்ஷிப்களைப் பெறும் போது, அவற்றை நீண்ட நேரம் எடுத்துச் செல்ல வேண்டும்.

இது முதல் இன்னிங்ஸில் சவாலானது, ஆனால் நாங்கள் 50-60 ரன்கள் கூடுதலாக எடுத் திருந்தால், அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். நன்றாக விளையாடக்கூடிய வீரர்கள் நல்ல தொடக்கம் கிடைத்ததும், அதை சதமாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

முதல் போட்டிக்கும், 2-வதுபோட்டிக்கும் இதுதான் வித்தியாசம். முதல் போட்டியில் கே.எல்.ராகுல் அடித்த சதம், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உதவியது. 2வது டெஸ்டில் எல்கர் சேர்த்த 96 ரன்கள்தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றியை கொடுத்தது.

ஹனுமா விஹாரி இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஆடினார், அதிலும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் அற்புதமாக இருந்தது. கடந்த காலங்களில் ஸ்ரேயஸ் ஐயரும் சிறப்பாக பேட் செய்துள்ளார். வாய்ப்புகள் கிடைத்த போதெல்லாம் இளம்வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். விஹாரி பேட்டிங் செய்த விதத்தில் இருந்து நாம் நம்பிக்கையைப் பெற முடியும்.

இவ்வாறு ராகுல் திராவிட் தெரிவித்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x