Published : 07 Jan 2022 07:38 AM
Last Updated : 07 Jan 2022 07:38 AM

தேசிய ஜூனியர் குதிரையேற்றத்தில் எம்எஸ்இ ரைடர்களுக்கு தங்கப் பதக்கம்

தேசிய ஜூனியர் குதிரையேற்றம் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற எம்எஸ்இ சேர்ந்த ரைடர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னை: தேசிய ஜூனியர் குதிரையேற்றம் சாம்பியன்ஷிப்பில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஈக்விடேஷனைச் (எம்எஸ்இ) சேர்ந்த 3 ரைடர்கள், அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

2021-ம் ஆண்டுக்கான தேசிய ஜூனியர் குதிரையேற்றம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த டிசம்பர் 19 முதல் 30-ம் தேதி வரை மும்பையில் நடைபெற்றது. இந்திய குதிரையேற்ற சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தத் தொடரில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஈக்விடேஷன் மையத்தைச் சேர்ந்த 3 ரைடர்கள் கலந்து கொண்டு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

முஸ்ஸாமில் இம்தியாஸ், டிரஸ்ஸேஜ் மற்றும் ஷோஜம்பிங் அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளையில் ரெத்திஃபர் இமென் ஜோஜம்பிங் அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இவர்கள் இருவருடன் நவ்யா கார்த்திக், ஜூனியர் லெவல் டிரஸ்ஸேஜ் போட்டியில் பங்கேற்பாளராக இருந்தார். இந்த ரைடர்களுக்கு பி.சாய் சைதன்யா பயிற்சியாளராகவும், அம்ரிதா பாலா பயிற்றுவிப்பாளர்களாகவும் செயல்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பதக்கம் வென்ற ரைடர்களுக்கு எம்எஸ்இ சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்எஸ்இ வழிகாட்டி மற்றும் ரைடர் பிரபு கணேசன், வெங்கடேஷ் டக்குபதி, கே.எஸ். பிரேம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x