

டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங் காயம் அடைந்ததையொட்டி மாற்று வீரராக இந்திய அணியில் மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
மொஹாலியில் ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது யுவராஜ்சிங்குக்கு கணுக் காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரது காயத்தின் தன்மை கவனிக்கப்பட்டு வருகிறது.
அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக யுவராஜ்சிங் முழு உடல் தகுதி பெற வாய்ப் புள்ளதாகவும் கருதப்படுகிறது. ஒருவேளை அவர் உடல் தகுதியை எட்டாவிட்டால் மணீஷ் பாண்டே அல்லது ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.