Published : 02 Jan 2022 05:16 PM
Last Updated : 02 Jan 2022 05:16 PM

குயின்டன் டீகாக் ஓய்வு தெ.ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கை மேலும் மோசமாக்கும்: ஹசிம் அம்லா கவலை

குயின்டன் டீ காக் | கோப்புப்படம்


ஜோகன்னஸ்பர்க் : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து குயின்டன் டீ காக்கின் திடீர் ஓய்வு தென் ஆப்பிரிக்க பேட்டிங்கை மேலும் மோசமாக்கும் என்று முன்னாள் வீரர் ஹசிம் அம்லா கவலை தெரிவித்துள்ளார்.

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், தென் ஆப்பிரி்க்க அணியின் விக்ெகட் கீப்பர் குயின்டன் டீ காக் திடீரென டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசை ஏற்கெனவே பலவீனமாக இருந்த நிலையில் குயின் டீ காக் ஓய்வு மேலும் மோசமாக்கும். கேப்டன் எல்கர், மார்க்ரம், பவுமா ஆகியோரைத் தவிர பெரிதாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியில் இல்லை. இதனால் பேட்டிங்கில் வலுக்குறைந்த நிலையில்தான் 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹசிம் அம்லா இணையதளம் ஒன்றுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

குயின்டன் டீ காக் ஓய்வு தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையை மேலும் பலவீனமாக்கும். நடுவரிசையில் பலம் சேர்க்க டீகாக், பவுமா இருந்தனர்.இதில் டீ காக் இல்லாத நிலையில் வலுவற்றதாகிவிட்டது. இதனால் பவுமா உயர்வரிசையில் களமிறங்க வேண்டிய நிலையில் அதாவது 3-வதுஅல்லது 4-வது வீரராகக் களமிறங்க வேண்டும். தேவைப்பட்டால் விக்கெட் சரிவைத் தடுத்த வேண்டிய பொறுப்பும் பவுமாக்குஇருக்கிறது.

இருப்பினும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியினர் சிறப்பாக ஆடி, வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன். எங்கள் மண்ணில் இந்திய அணியிடம் தொடரை இழக்கமாட்டோம். இதில் மார்க்ரம், எல்கர் இருவரும் நல்ல நிலையில் பேட் செய்து சிறப்பான இன்னிங்ஸை ஆடினால், வலுவான போட்டியாக அமையும். இளம் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையோடு விளையாட வேண்டியது அவசியம்.

செஞ்சூரியன் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் பேட் செய்வது கடினமானது. நாட்கள் செல்லச்செல்ல பேட் செய்வது கடினமாக இருக்கும். அதனால்தான் கோலி டாஸ்வென்றதும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதிலும் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில்அடித்து, அதை முறியடிக்க முடியாமல் 130ரன்கள் பின்தங்கியது, தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக அமைந்தது
இவ்வாறு அம்லா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x