ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கு மகேஷ் பூபதியே காரணம்: லியாண்டர் பயஸ் குற்றச்சாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கு மகேஷ் பூபதியே காரணம்: லியாண்டர் பயஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கும், அது எனக்கு மோசமான போட்டியாக அமைந்ததற்கும் மகேஷ் பூபதியே காரணம் என இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ரோஹன் போபண்ணா என்னுடன் விளையாட மறுத்ததற்கு மகேஷ் பூபதிதான் காரணம். அவர்கள் நான் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மட்டுமல்ல, இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் அழித்தார்கள்.

இதனால் ஒலிம்பிக் வரலாற் றில் இடம்பெறும் வாய்ப்பும் வீணா னது” என்றார். எதிர்காலத்தில் பூபதியுடன் ஜோடி சேரும் வாய்ப் புள்ளதா என்று பயஸிடம் கேட்ட போது, நிச்சயம் இல்லை என உறுதியாகத் தெரிவித்தார்.

இந்திய டென்னிஸ் வரலாற்றில் மகேஷ் பூபதியும், லியாண்டர் பயஸும் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் இணைந்து சாம்பியன் பட்டம் வென்று புகழ் பெற்ற அளவுக்கு, சர்ச்சை யிலும் சிக்கினார்கள்.

இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டால் பிரிந் திருந்தவர்கள் மீண்டும் இணைந்து மீண்டும் பிரிந்தார்கள். அதன்பிறகு பூபதியுடன் இணைந்து விளை யாடமாட்டேன் என பயஸ்கூற, லண்டன் ஒலிம்பிக்கில் பயஸுடன் இணைந்து விளையாட மகேஷ் பூபதியும், ரோஹன் போபண்ணா வும் மறுத்துவிட்டனர்.

இதனால் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பிருந்தும் வீரர்களின் பிரச்சினையால் அது பாழாய்ப் போனது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in