Last Updated : 31 Dec, 2021 03:48 PM

 

Published : 31 Dec 2021 03:48 PM
Last Updated : 31 Dec 2021 03:48 PM

ஷமியும் பும்ராவும்தான் எங்களுக்கு அச்சுறுத்தல்: கேப்டன் டீன் எல்கர் ஒப்புதல்

செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமியும், ஜஸ்பிரித் பும்ராவும் அடுத்த இரு போட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று அந்நாட்டு அணியின் கேப்டன் டீன் எல்கர் ஒப்புக்கொண்டுள்ளார்.

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய 113 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதுவரை செஞ்சூரியனில் வென்றதில்லை என்ற நிலையை மாற்றி தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் 20 விக்கெட்டுகளில் 18 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ளனர். அதிலும் முகமது ஷமி முதல் இன்னிங்ஸில் 5 வி்க்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் 200-வது விக்கெட்டுகள் என்ற முத்திரையை பதித்தார். 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாகவும் இருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சுக் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறுகையில் “இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், அதிலும் குறிப்பாக பும்ரா, ஷமி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு வரும் போட்டிகளில் அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

எங்களின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு ஷமியின் பந்துவீச்சு சிக்கலை ஏற்படுத்துகிறது. முதல் இன்னிங்ஸில் அது தெளிவாகத் தெரிந்தது. பும்ராவும் உச்ச கட்ட உற்சாகத்தில், லென் லென்த்தில் பந்துவீசுவது அச்சுறுத்தல்தான். தன்னுடைய பந்தில் ரன் அடிக்கிறார்களோ இல்லையோ பும்ராவின் ஒவ்வொரு பந்தையும் உற்சாகத்துடன் வீசுகிறார்.

டீன் எல்கர்

இருவரின் பந்துவீச்சு நிச்சயம் எங்களின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவே இருக்கும். இப்போதுள்ள நிலையில் இந்திய அணிக்கு சரிவிகிதமான பந்துவீச்சாளர்கள் கிைடத்துள்ளார்கள். முகமது சிராஜின் பந்துவீச்சில் வேரியேஷன் இருக்கிறது, சில பந்துகள் எதிர்த்து விளையாட கடினமாக இருக்கிறது. இருப்பினும் பும்ரா, ஷமிதான் எங்களின் பேட்ஸ்மேன்களுக்கு அதிக தொந்தரவும், அச்சுறுத்தலும் கொடுப்பார்கள்” என்றார் டீன் எல்கர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x