Last Updated : 31 Dec, 2021 08:29 AM

 

Published : 31 Dec 2021 08:29 AM
Last Updated : 31 Dec 2021 08:29 AM

தென் ஆப்பிரி்க்க விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் இளம்வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு

தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் : படம் உதவி ட்விட்டர்


செஞ்சூரியன்: தென் ஆப்பிரி்க்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக திடீரென நேற்று அறிவித்துள்ளார். 29 வயதாகும் டீ காக் மிக இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுள்ளார்.

இதனால், இந்திய அணிக்கு எதிராக அடுத்து நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் டீ காக் விளையாடமாட்டார். டீ காக் இல்லாதது தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த தோல்விக்குப்பின் டீ காக் தனது ஓய்வை திடீரென அறிவித்தார். அதேசமயம், வெள்ளைப்பந்துப்போட்டிகளான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என டீகாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவி்ப்பில் “ குயின்டன் டீ காக் தனது குடும்பத்தாருடன் அதிகமான நேரம் செலவிட விரும்புவதால், டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். வரும் வாரத்தில் குயின்டன் டீகாக் மனைவி சாஷாவுக்கு முதல் பிரசவம் நடைபெற இருக்கிறது. அந்த நேரத்தில் அவர் மனைவியுடன் இருக்க விரும்பினார்” எனத் தெரிவித்துள்ளது.

குயின்டன் டீகாக் வெளியிட்ட அறிவிப்பில் “ டெஸ்ட் கிரி்க்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எனது இந்த முடிவு எளிதானது அல்ல. நீண்ட காலம் யோசித்து என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, என்னுடைய வாழ்க்கைக்கு எதற்கெல்லாம் முன்னுரிமை இப்போது தேவை என்பதை அறிந்து எடுத்தேன். என்னுடைய மனைவி சாஷா இருவரும் வரும் நாட்களில் எங்களின் முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறோம்.

என்னுடைய குடும்பம்தான் எனக்கு அனைத்தும் ஆதலால் அவர்களுடன் நான் போதுமான நேரத்தை செலவிடவிரும்புகிறேன். வாழ்க்கையில் புதிய அத்யாயத்தை தொடங்க இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன், என்னுடைய நாட்டுக்காக பல போட்டிகளில் பங்கேற்றதை வரும்பினேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்த ஏற்ற இறக்கங்களையும் விரும்பிதான் ஏற்றுக்கொம்டேன், கொண்டாட்டங்களையும், தோல்விகளையும் ரசித்தேன். வாழ்க்கையில் நேரத்தைத் தவிர அனைத்தையும் விலைகொடுத்து வாங்கிட முடியும்.

இப்போது, எனக்கு பிடித்தவர்கள் என்னுடன் இருக்க வேண்டிய நேரம்இதுதான். என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் என்னுடன் பயணித்த சகவீரர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய பயிற்சியாளர்கள்,சக வீரர்கள், நிர்வாகத்தினர், குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இத்துடன் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட வில்லை. தொடர்ந்து ஒருநாள் டி20 போட்டிகளில் என்னுடைய நாட்டுக்காக விளையாடுவேன்

இவ்வாறு டீ காக் தெரிவித்தார்

கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டீ காக் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டீ காக் 6 சதங்கள்,22 அரைசதங்கள் அடித்து 3,300 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 141 ரன்கள் சேர்த்துள்ள டீ காக் 38.82 சராசரி வைத்துள்ளார்.

முன்னாள் கேப்டன் விக்கெட் கீப்பரான டீ காக் 232 டிஸ்மிஸல்கள் செய்துள்ளார். இதில் 221 கேட்சுகள், 11 ஸ்டெம்பிங்குகள் அடங்கும். டெஸ்ட் போட்டி சாம்பியன்ஷிப் தொடரில் அதிகமான கேட்சுகளைபிடித்த 3-வது விக்கெட் கீப்பர் ென்ற பெருமை டீகாக்கிற்கு உண்டு, இவர் 11 போட்டிகளில் 48 கேட்சுகளை பிடித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x