

கவாஸ்கர்:
விராட் கோலியின் சகாப்தம் தொடங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். அவர் டெஸ்ட் கேப்டனாக என்று உருவெடுத்தாரோ அன்றே அது தொடங்கி விட்டது. இப்போது இன்னும் அது வேகம் பிடித்துள்ளது. அடுத்த சச்சினாக உருவெடுத்துள்ளார் கோலி. இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் யாராலும் இதுபோன்று விளையாட முடியாது. மிகப் பெரிய மேதையாக மாறியுள்ளார் கோலி. யாரையும் இப்படி ஆடி நான் பார்த்ததில்லை.
சேவாக்:
கோலிதான் அடுத்த சச்சின் டெண்டுல்கர். அதில் சந்தேகமே தேவையில்லை. கவாஸ்கர் காலத்தில் உருவானார் சச்சின். சச்சின் காலத்தில் நான் வளர்ந்தேன். இப்போது கோலியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன்.
சச்சின்:
வாவ்.... கோலி.. சிறப்பானது இது.. மாபெரும் வெற்றி.. மிகப் பெரிய போராட்டம்.
கும்ப்ளே:
கோலி.. உங்களுடைய பேட்டிங் வியப்பளிக்கிறது.
பிரையன் லாரா:
கோலியின் பேட்டிங்கை நம்பமுடியவில்லை. யாராவது உதவி செய்தால் அவருடைய பால்ய கால ஆட்டத்தை வீடியோவில் பார்க்க விரும்புகிறேன்.
ஷிகர் தவண்:
கோலிக்கு வாழ்த்துகள். உங்களிடம் இருந்து பேட்டிங்கை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
யுவராஜ்சிங்:
சூப்பர் பார்மில் உள்ள விராட் வெற்றிக்கு மேல் வெற்றி தேடித்தருவது மகிழ்ச்சி.
அமிதாப் பச்சன்:
‘உங்கள் திறமை முடிவில்லாதது. நீங்கள் மிகப் பெரிய ஜீனியஸ். இன்றைய இரவுக்காக நன்றி. இது போல் பல இரவுகள் எங்களுக்கு கிடைக்கட்டும்.