

டி 20 உலக கோப்பை தொடரின் பிரதான சுற்றான 'சூப்பர் 10' இன்று தொடங்குகிறது. இரண்டாவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ள தோனி தலை மையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதுகிறது. நாக்பூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
போட்டியை நடத்தும் நாடு இதுவரை டி 20 உலக கோப்பையை வென்றதில்லை என்ற கிரிக்கெட் வரலாற்றில், நம்பர் ஒன் அணியாக திகழும் இந்திய அணியே இம்முறை கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளதாக முன்னணி அணிகளின் கேப்டன் களும், முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.
2007ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை சூப்பர் 10 சுற்றில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வங்கதேசம் அணிகள் உள்ளன. மற்ற அணிகளை விட இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகி உள்ளது. உலக கோப்பையையொட்டி இந்திய அணி மூன்று டி 20 தொடர்களில் பங்கேற்றது.
இதில் 11 ஆட்டத்தில் 10ல் வெற்றிகளுடன் 3 தொடர்களையும் வென்றது. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியிருந்தது. தென் ஆப்பிரிக்காவுடன் கடைசி வரை போராடி 4 ரன்னில் வெற்றியை எட்டிப் பிடிக்க முடியாமல் கோட்டை விட்டது.
அச்சுறுத்தல்
2007 உலக கோப்பை உட்பட நான்கு டி 20 போட்டிகளில் இது வரை இந்திய அணி நியூஸி லாந்துடன் மோதியுள்ளது. இதில் ஒரு வெற்றியை கூட இந்தியா பதிவு செய்ததில்லை. ஆனால் தற்போது சொந்த மண்ணில் நடை பெறும் உலக கோப்பை தொடரில் நியூஸிலாந்து உட்பட அனைத்து அணிகளுக்கும் இந்தியா அச்சுறுத்தலாகவே இருக்கக்கூடும்.
தொடர்ச்சியான வெற்றிகளால் இந்திய அணியின் தன்னம்பிக்கை வலுப்பெற்று வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 4 ரன்னில் அடைந்த தோல்வி மெத்தனமாக இருக்கக் கூடாது என்பதற்கு அடிக்கப் பட்ட எச்சரிகை மணியாகவே கருதப்படுகிறது.
விராட் கோலி
விராட் கோலி கடந்த இரு மாதங்களாக நல்ல பார்மில் உள்ளார். அவர் 7 ஆட்டங்களில் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். இரு ஆட்டங்களில் 40 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். இலக்கை துரத்திய 4 ஆட்டங்களில் வெற்றிக்கு அவர் அளித்த சிறந்த பங்களிப்பும் இதில் அடங்கும். தொடக்க வீரான ரோஹித் சர்மாவும் சிறந்த பார்மில் உள்ளார். 6வது முறையாக டி 20 உலக கோப்பையில் விளையாடும் அவர் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.
அவ்வவ்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவண் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 73 ரன்கள் சேர்த்து தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளார். நடுகள வரிசையில் ரெய்னா, யுவராஜ் சிங், தோனி ஆகியோரும் பெரிய அளவிலான ஷாட்களை விளையாடக்கூடியவர்கள்.
பின்கள வரிசை
மற்ற அணிகளை விட இந்தியாவே கோப்பையை வெல்லும் என கணிக்கப்படுவதற்கு பின்கள பேட்டிங் வரிசையே காரணமாக உள்ளது. பின்கள வரிசையில் ஹர்திக் பாண்டியா பலம் சேர்ப்பவராக உள்ளார். இவர் வருகைக்கு பின்னர் தான் இந்திய அணியின் பின்கள பேட்டிங் வலுப்பெற்றுள்ளது.
ஜடேஜா, அஸ்வின் ஆகியோ ரும் பேட்டிங்கில் கைக்கொடுக்கக் கூடியவர்கள்தான். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவின் வழக்கத்துக்கு மாறான பந்து வீச்சு முறை, நெஹ்ரா வின் அனுபவம் பலம் சேர்த்து வருகிறது. சமீபகால போட்டி களில் அவர்கள் சிறப்பாக செயல் பட்டுள்ளனர். இந்த திறனை அவர்கள் உலக கோப்பை தொடரி லும் முன்னெடுத்துச் சென்றால் எதிரணிக்கு சவால் தரலாம்.
முகமது ஷமி
மிதவேகப் பந்து வீச்சில் பலம் சேர்க்கும் பாண்டியா அணியின் சுமையை குறைப்பவராக உள்ளார். ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கக் கூடும் என்பதால் அஸ்வின், ஜடேஜா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். முகமது ஷமி விளையாடும் லெவனில் இடம் பிடிப்பதில் போட்டி நிலவுகிறது. அவர் களமிறங்கும் பட்சத்தில் நெஹ்ராவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்.
நியூஸிலாந்து
நியூஸிலாந்து அணி கடைசியாக விளையாடிய நான்கு டி 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தங்களது சொந்த மண்ணியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்திருந்தது. அதேவேளையில் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்திருந்தது.
மெக்கலம் ஓய்வுக்கு பின் இந்த உலக கோப்பையை எதிர்கொள் ளும் நியூஸிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கிராண்ட் எலியாட், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன் ஆகியோர் அதிரடி யாக விளையாடக் கூடியவர்கள்.
மேலும் இடது கை, வலது கை கூட்டணியுடன் சிறந்த வேகப் பந்து, சுழலில் பல்வேறு வித்தி யாசங்களை காட்டி ஆட்டத்தின் நடுப்பகுதியில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் உள்ள பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முயற்சிக்கும் என்ப தால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நேரம்: இரவு 7.30
இடம்: நாக்பூர்
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்