

தமிழகத்தில் உள்ள 23 விளை யாட்டு விடுதிகள் மற்றும் 5 விளை யாட்டுப் பள்ளிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாணவ, மாணவியர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்திலுள்ள விளை யாட்டு விடுதிகளில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட் (மாணவர் மட்டும்), கால்பந்து உட்பட பல்வேறு விளையாட்டு களில் பயிற்சி பெற 7, 8, 9 மற்றும்11-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் ஏப்ரல் 25 முதல் 30-ம் தேதிவரை நடைபெற உள்ளது.
இலவசம்
விளையாட்டில் சிறந்து விளங் கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2016-2017 ம் ஆண்டுசேர்க்கைக்கு உரிய படி வங்களை வரும் 10 ம் தேதி முதல் அனைத்து மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ள லாம். அல்லது www.sdat.tn.gov.in என்கிற இணையதள முகவரி யில் பதிவிறக்கம் செய்து கொள் ளலாம்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை தபால் மூலம் அல்லது நேரில், அந்தந்த மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்களிடம் 20.04.2016 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விளை யாட்டு விடுதிகள் தொடர்பான விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.