Published : 28 Dec 2021 10:12 AM
Last Updated : 28 Dec 2021 10:12 AM

ஜோ ரூட்டை இப்படியா தவிக்கவிடுவிங்க; உங்க முகத்தை காட்டுங்க: இங்கிலாந்து வீரர்களை விளாசிய மைக்கேல் வான்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் | கோப்புப்படம்


மெல்போர்ன்: மெல்போர்னில் நடந்த ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திேரலியாவிடம் மோசமான தோல்வியைச் சந்தித்தபின், ஜோ ரூட்டை அம்போனு தனியாவிட்டுட்டு போய்விட்டார்கள். சக வீரர்கள் மைதானத்துக்குவந்து ரசிகர்களிடம் முகத்தை காட்டி கேப்டனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் விளாசியுள்ளார்.

மெல்போர்னில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 267 ரன்களும் சேர்த்தன.

2-வது இன்னிங்ஸில் 82 ரன்கள் பின்தங்கியநிலையில் இங்கிலாந்து அணி ஆடத் தொடங்கியது. 2-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் சேர்த்திருந்தது இங்கிலாந்து அணி.
இன்று 3-வதுநாள் ஆட்டம் தொடங்கி உணவு இடைவேளைக்குள்ளாகவே மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் அடுத்த 15 ஓவர்களில் 37 ரன்களுக்குள் இழந்தது இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும்14 ரன்களில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தவுடன், மைதானத்தில் எந்த வீரர்களும் இல்லாமல், கேப்டன் ஜோ ரூட்டை மட்டும் பேட்டிளி்க்கவைத்துவிட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்கள். இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து அணியிந் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார் அவர் கூறியதாவது:

இங்கிலாந்து வீரர்கள் செயல் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கேப்டன் ஜோ ரூட் ஊகடங்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். ஆனால் அவரை தனிஆளாக தவிக்கவிட்டு அந்த நேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் எதற்கும் தொடர்பில்லாமல் ஓய்வறைக்கு நடந்து சென்றார்கள். இப்படி செய்த இங்கிலாந்து வீரர்கள் செயல் எனக்குப் பிடிக்கவில்லை.

தோல்வி அடைந்துவீட்டீர்கள் வெட்கமாகத்தான் இருக்கும். மோசமாக விளையாடினீர்கள், 68 ரன்னில் 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்துவிட்டீர்கள். அதற்காக ஒடி ஒளிந்துகொள்வீர்களா. மைதானத்துக்கு இங்கிலாந்து வீர்கள் வந்து, ரசிகர்களிடம் முகத்தைக் காட்ட வேண்டும்.

கேப்டனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். கேப்டன்தான் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப் போகிறார், இதற்குமுன் அவர்தான் பதில் அளித்தார்.இ துபோன்ற கடினமான நேரங்களில் சக வீர்கள் கேப்டனுக்கு துணையாக இருக்க வேண்டும்

இவ்வாறு மைக்கேல் வான் தெரிவித்தார்

2021ம் ஆண்டில் இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் 1708 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ரோரி பர்ன்ஸ் 530 ரன்களும், 3-வதுஇடத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வீசிய எஸ்ட்ராஸ் 412 ரன்களும் உள்ளன. 4-வது இடத்தில் பேர்்ஸ்டோ391 ரன்களும், ஒலே போப் 368ரன்களும் சேர்த்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x