Published : 27 Dec 2021 07:31 PM
Last Updated : 27 Dec 2021 07:31 PM

2-ம்நாள் ஆட்டத்தில் மழை விளையாடியது: இந்தியா-தெ.ஆப்பிரிக்க டெஸ்ட் பாதிப்பு

செஞ்சூரியன் மைதானத்தில் கனமழை பெய்ததால் ஆடுகளம் மூடி வைக்கப்பட்டிருந்த காட்சி | படம் உதவி ட்விட்டர்


செஞ்சூரியன்: செஞ்சூரியனில் நடந்து வரும் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

செஞ்சூரியனில் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணாக ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

காலையில் லேசான சாரலுடன் தொடங்கிய மழைபிற்பகலில் கனமழையாக மாறி கொட்டத் தொடங்கியது. மழை குறைந்துவிடும் சூழலில் ஆட்டத்தை நடத்தலாம் என நடுவர்கள் காத்திருந்தனர்.அதற்கு ஏற்றார்போல் இருமுறை மழை நின்றது. அப்போது நடுவர்கள் இருவரும் மைதானத்தை ஆய்வு செய்து திரும்பினர். ஆனால், பிற்பகலில் கனமழை பெய்யவே வேறுவழியின்றி முடிவை மாற்றி ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்துகளில் 122 ரன்களுடனும், ரஹானே81 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கே.எல்.ராகுல் ஆசியாவுக்கு வெளியே அடிக்கும் 5-வது சதம், டெஸ்ட் போட்டிகளில்அடிக்கும் 7-வது சதம் இதுவாகும். தான் களமிறங்கிய வெளிநாடுகளில் எல்லாம் ராகுல் சதம் அடித்து வருகிறார்.
முதல் விக்கெட்டுக்கு மயங்க் அகர்வாலுடன் சேர்ந்து 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல், கேப்டன் கோலியுடன் சேர்ந்து 82 ரன்கள் சேர்த்தார். தற்போது ரஹானேவுடன் சேர்ந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறார்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 117 ரன்கள் சேர்த்தனர். 2010ம் ஆண்டுக்குப்பின் இந்திய தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு சதம் அடிப்பது இதுதான் முதல் முறையாகும். அதுமட்டுமல்லாமல்தென் ஆப்பிரிக்காவில் இந்திய தொடக்க ஜோடி சதம் அடித்தது இது 3-வது முறையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x