

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, சுழற்பந்து வீச்சாளர் அராபத் சன்னி ஆகியோரது பந்து வீச்சு முறை நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விதிமுறைகளுக்கு மாறாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து இருவரது பந்து வீச்சும் ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற சென்னையில் உள்ள சோதனை மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.