ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா தோல்வி
Updated on
1 min read

டாக்கா: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரின் அரை இறுதியில் இந்தியா 3-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி யடைந்தது.

வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் அரை இறுதியில் நேற்று இந்தியா - ஜப்பான் மோதின. இதில் ஜப்பான் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஷோட்டா யமடா, ராய்கி புஜி ஷாமா, யோஷிகி கிரிஷிதா, கோஷி கவாபே, ரியோமா ஓகா ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் தில்பிரீத் சிங், ஹர்மான்பிரீத் சிங், ஹர்திக் சிங் கோல் அடித்தனர்.

அரை இறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி இன்றுபிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in