

சென்னை: டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற 59-வது தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை,அரும்பாக்கத்தில் உள்ள கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் அவிக் ஷித் விஜய் விஸ்வநாத் 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அண்ணா நகர் ரோலக் ஸ்கேட்டிங் கிளப் தலைமை பயிற்சியாளர் கே.பி.உன்னிகிருஷ்ணனிடம் கடந்த 2010-ம் ஆண்டுமுதல் இவர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறார். அவிக் ஷித் பல மாநில, தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சிபிஎஸ்சி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த59-வது தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 14 முதல் 17 வயது வரையிலான ஜூனியர் ஆண்கள் பிரிவில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார். இதில் அவர் பங்கேற்ற 5 போட்டிகளில் 4-ல் தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.
இவரது அணியைச் சேர்ந்தஆர்யா விவேக் விஸ்வநாத்தும் 11 முதல் 14 வயதினருக்கான சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில் பங்கேற்று 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். இவர்கள்இருவரும் இணைந்து வரும் காலத்தில் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பல்வேறு பெருமைகளை பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.