

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்களின் செல்ல பெயர்கள் போட்டியின் போது ஆடுகளத்தில் உள்ள ஸ்டெம்புகளில் வைக்கப் பட்டிருந்த மைக் மூலம் தெரிய வந்துள்ளது. விராட் கோலியை 'ஷீகு' என்றுதான் செல்லமாக தோனி அழைப்பாராம். ஷீகு என்றால் ஷாம்பக் காமிக்ஸ் கதைகளில் வரும் முயலை குறிப்பதாகும். கோலிக்கு காதுகள் சற்று பெரியதாக இருப்பதால் இப்படி அழைக்கிறார்களாம்.
தோனியின் முழு பெயர் மகேந்திரசிங் தோனி என்பதால் அதனை சுருக்கி மஹி என அனை வரும் கூப்பிடுகின்றனர். ஜடோ ஜாவை எல்லோரும் ஜாடு குறிப்பிடுகின்றனர். அவரது உண்மையான பெயரின் சுருக்கமான வடிவமாம் இது.
ரெய்னாவை அனைவரும் சிறுவயதில் சோனு என்று அழைத் துள்ளனர். இந்த பெயரிலேயே தனது சக அணியினருடன் வலம் வருகிறார் ரெய்னா. ஹர்பஜனின் செல்லப்பெயர் அனைவரும் அறிந்ததே. அவர் பாஜி, டர்பனேட்டர் எனவும் சக வீரர்களால் அழைக்கப்படுகிறார்.
அஸ்வினை அஸ் என்றும், ரோஹித் சர்மாவை ஷானா எனவும் யுவராஜ் சிங்கை யுவி எனவும், அஜிங்க்ய ரஹானேவை அஜூ என்றும், ஷிகர் தவணை, ஹபார் எனவும் குறிப்பிடுகின்றனர். இளம் வீரரான ஹர்திக் பாண்டியா அவரது வித்தியாசமான சிகை அலங்காரத்தால் ஹேரி என்று அழைக்கப்படுகிறார்.