டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இங்கிலாந்து - இலங்கை பலப்பரீட்சை

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இங்கிலாந்து - இலங்கை பலப்பரீட்சை
Updated on
2 min read

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இங்கிலாந்து மூன்று ஆட்டத்தில் இரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. சூப்பர் 10 சுற்றில் அந்த அணிக்கு இது கடைசி ஆட்டமாகும். 4 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.

முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து இரண்டாவது ஆட்டத் தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்கள் இலக்கை அடைந்து சாதனை படைத்தது.

ஆனால் மூன்றாவது ஆட்டத்தில் பலமிழந்த ஆப்கானிஸ்தானிடம் கடுமையாக திணறியது. முன்னணி வீரர்கள் கைகொடுக்காத நிலையில் மொயின் அலி ஆல்ரவுண்டராக அசத்தி வெற்றி தேடிக்கொடுத்தார். சுழலுக்கு கைகொடுக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோ ரூட், மோர்கன் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களான ரங்கனா ஹெராத், ஜெப்ரே வாண்டர்ஸே சவாலாக இருக்கக்கூடும்.

நடப்பு சாம்பியனான இலங்கை அணிக்கு இது 3வது ஆட்டமாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் பலம்குறைந்த ஆப்கானிஸ்தானை வென்ற நிலையில் அடுத்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் 7 விக்கெட் வித்தியாசத் தில் தோல்வியை சந்தித்தது.

பேட்டிங்கில், மூத்த வீரரான தில்ஷானை மட்டுமே அணி நம்பி உள்ளது. அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணையாக விளையாடும் பட்சத்திலேயே ஆட்டத்தின் முடிவு சாதகமாக அமையக்கூடும். தினேஷ் சந்திமால், ஷமரா கபுகேதரா ஆகியோருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை போதுமான அளவிலான திறமை அவர்களிடம் இருந்து வெளிப்படவில்லை.

அவர்கள் பொறுப்புடன் விளை யாடும் பட்சத்தில் அணிக்கு வலுசேர்க்கலாம். இதேபோல் ஆல்ரவுண்டர் திஷரா பெரேராவும் பொறுப்பை உணர்ந்து விளை யாடினால் நெருக்கடி தரலாம். மலிங்கா தொடரில் இருந்து விலகி யதால் 37 வயதான மூத்த சுழற் பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் துக்கு அதிக நெருக்கடி ஏற்பட் டுள்ளது. மலிங்கா இல்லாத நிலை யில் வேகப்பந்து வீச்சாளர்களான குலசேகரா, துஷ்மந்தா ஷமீரா ஆகியோரால் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடிய வில்லை.

அணிகள் விவரம்:

இங்கிலாந்து:

மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் பிலிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, லயாம் பிளங்கெட், ரீஸ் டாப்ளே, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், லயாம் டாவ்ஸன்.

இலங்கை:

மேத்யூஸ் (கேப்டன்), தில்ஷான், தினேஷ் சந்திமால், மிலிந்தா சிறிவர்தனா, சமரா கபுகேதரா, லஹிரு திரிமானே, ரங்கனா ஹெராத், ஜெயசூரியா, நுவன் குலசேகரா, சுரங்கா லக்மல், திஷரா பெரேரா, சேனாநாயகே, ஷனகா, துஷ்மந்தா ஷமீரா, ஜெப்ரே வாண்டர்ஸே.

நேரம்: இரவு 7.30

இடம்: டெல்லி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in