

2007ல் நடைபெற்ற முதல் டி 20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஆல் ரவுண்டராக இடம் பெற்றவர் ஜோகிந்தர் சர்மா. இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 4 பந்துகளுக்கு 6 ரன் தேவை என்ற நிலையில் இவர் வீசிய பந்தை மிஸ்பா ஸ்கூப் ஷாட் அடித்து சாந்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்ட இந்தியா பட்டம் வென்றது.
ஹரியாணா மாநிலம் ரோஹ்தக் பகுதியை சேர்ந்த ஜோகிந்தர் சர்மா, உலக கோப்பையை வென்ற பின்னர் டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. 4 ஒருநாள் போட்டி, நான்கு டி 20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள அவர் தற்போது ஹரியாணா மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சில ஆண்டுகள் விளையாடிய அவர் சமீபத்தில் தனது சக வீரரான மோகித் சர்மாவின் திருமணத்தில் காவல் துறை சீருடையில் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஜோகிந்தர் சர்மா.