இந்திய டெஸ்ட் தொடர்: தெ.ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவு; கடைசி 2 போட்டிகளில் இருந்து முக்கிய வீரர் விலகல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் அனுபவ வீரரான குயின் டன் டீகாக் பங்கேற்கமாட்டார் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன

குயின் டன் டீகாக் மனைவி முதல் குழந்தை பிரசவம் ஜனவரி முதல்வாரத்தில் இருப்பதால், மனைவியுடன் இருக்கவேண்டியிருப்பதால் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டீகாக் விலகியுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு வரும் 17ம் தேதி இந்திய அணி பயணம் மேற்கொள்கிறது, 26ம் தேதி பாக்ஸிங்டே அன்றுமுதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது ஜனவரி 15ம் தேதி முடிந்துவிடும். ஜனவரி 3ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் 2-வது டெஸ்ட் போட்டியும், கேப்டவுனில் ஜனவரி 11ம் தேதி கடைசிடெஸ்ட் போட்டியும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

இந்திய அணிக்கு எதிரான வலிமையான 21 வீரர்கள் கொண்ட அணியை தென் ஆப்பிரிக்கா கடந்த வாரமே அறிவித்ததுவிட்டது. இதில் வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து காகிஸோ ரபாடா, ஆன்ரிச் நோரக்கியா, லுங்கி இங்கிடி, டுனே ஆலிவர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கஅணி விவரம்:

டீன் எல்கர்(கேப்டன்), டெம்பா பவுமா(துணைக் கேப்டன்), குயின்டன் டீ காக், காகிசோ ரபாடா, சாரேல் எர்வி, பெருன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லின்டே, கேசவ் மகராஜ், லுங்கிஇங்கிடி, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், ஆன்ரிச் நோர்ர்க்கியா, கீகன் பீட்டர்ஸன், ராசே வான் டர் டூசென், கெயில் வெர்ரினே, மார்கோ ஜான்ஸன், கிளென்டன் ஸ்டூரமென், பிரிநேலன் சுப்ராயன்,சிசான்டா மகாலா, ரேயன் ரிக்கல்டன், டூனே ஆலிவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in