ஆறுதல் வெற்றி யாருக்கு? - தென் ஆப்பிரிக்கா - இலங்கை இன்று மோதல்

ஆறுதல் வெற்றி யாருக்கு? - தென் ஆப்பிரிக்கா - இலங்கை இன்று மோதல்
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையில் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன. அரையிறுதிச் சுற்றுக்கு முன் னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்த அணிகள், இன்றைய போட்டி யில் ஆறுதல் வெற்றிபெறும் நோக் கத்துடன் களம் இறங்குகின்றன.

இந்தத் தொடரில் இருந்து வெளி யேறியதால் இலங்கை அணிக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. தற்போதைய அணியை மாற்றிவிட்டு இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை உரு வாக்க வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வரு கின்றனர். இந்நிலையில் தங்கள் மக்களிடம் இழந்த மரியாதையை பெற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆறுதல் வெற்றியடைய வேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளது.

தில்ஷான், மேத்யூஸ் ஆகியோரின் பேட்டிங்கையும், ஹெராத்தின் பந்துவீச்சையுமே அந்த அணி பெரிதாக நம்பியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. இந்த தொடரில் 2 முறை அந்த அணி 200 ரன்களைக் கடந்துள்ளது. இருந்தபோதிலும் பந்துவீச்சு கொஞ்சம் சொதப்பலாக உள்ள தால் அந்த அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. இன்றைய போட்டியில் பந்துவீச்சில் உள்ள குறைபாடுகளைக் களைந்து வெற்றிபெறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது. இதற்கு டிவில்லியர்ஸ், ஆம்லா, டி காக், டேல் ஸ்டெயின் ஆகியோரை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in