15-வது ஐபிஎல் டி20 மெகா ஏலம் எப்போது? 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

2022-ம் ஆண்டு நடக்கும் 15-வது ஐபிஎல் டி20 தொடரின் மெகா ஏலம் எப்போது நடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

15-வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியானது. ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகள் இருந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஏற்கெனவே இருந்த 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. 8 அணிகளும் சேர்ந்து 27 வீரர்களைத் தக்கவைத்துள்ளன. மற்ற வீரர்களை விடுவித்தது. இவர்கள் ஏலத்தில் அறிவிக்கப்படும் அவர்களை எடுக்கக் கடும் போட்டி நடக்கும். இதில் புதிதாக வந்துள்ள இரு அணிகளும் இன்னும் வீரர்கள் தக்கவைப்பு குறித்த பட்டியலைத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடரின் மெகா ஏலம் எப்போது நடக்கும், எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்குச் செல்வார்கள் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அந்த வகையில் இம்மாத இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெறலாம் என்றும் மும்பை அல்லது சென்னை ஆகிய இரு நகரங்களில் ஏதாவது ஒரு நகரில் மெகா ஏலம் நடைபெறலாம் என ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in