Published : 11 Dec 2021 03:07 AM
Last Updated : 11 Dec 2021 03:07 AM

பிஎஸ்பிபி கேரம் விளையாட்டு போட்டிகள்: ஐஓசிஎல் அணி சாம்பியன் பட்டம் வென்றது

சென்னை நேரு விளையாட்டரங்கில் பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் 28-வது பதிப்பு கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்த ஓஎன்ஜிசி வீராங்கனை ராஷ்மி குமாரிக்கு பரிசு வழங்குகிறார் சிபிசிஎல் நிர்வாக இயக்குநர் அர்விந்த் குமார்.

சென்னை

பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் (பிஎஸ்பிபி) 28-வது பதிப்பு கேரம் விளையாட்டு தொடர், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) சார்பில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.

இதில் நாடுமுழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஓஎன்ஜிசி வீராங்கனைராஷ்மி குமாரி முதலிடம் பிடித்தார். துபா சாஹர் 2-வது இடத்தையும் (ஐஒசிஎல்), காஜல் குமாரி (ஐஒசிஎல்) 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் னிவாஸ் (ஐஓசிஎல்) முதலிடம் பிடித்தார். இதே நிறுவனத்தை சேர்ந்த முகமது குஃப்ரான் 2-வதுஇடத்தையும், ரமேஷ் பாபு 3-வதுஇடத்தையும் பிடித்தனர். இரட்டையர் பிரிவில் ஐஓசிஎல் அணியைச் சேர்ந்த காஜல் குமாரி, துபா சாஹர்ஜோடி முதலிடம் பிடித்தது. ஓஎன்ஜிசி அணியைச் சேர்ந்த ராஷ்மி குமாரி, இளவழகி ஜோடி 2-வதுஇடத்தை பிடித்தது. ஆடவர் இரட்டையர் பிரிவில் ஐஓசிஎல் அணியைச் சேர்ந்த ரமேஷ்பாபு, யோகேஷ் பர்தேஷி ஜோடி முதலிடத்தையும், இதே நிறுவனத்தைச் சேர்ந்த னிவாஸ், முகமது குஃப்ரான் ஜோடி 2-வது இடத்தையும் பிடித்தன.

ஆடவருக்கான அணிகள் பிரிவில் ஐஓசிஎல் நிறுவனத்தின் னிவாஸ், முகமது குஃப்ரான், யோகேஷ் பர்தேஷி, ரமேஷ் பாபு ஆகியோரை உள்ளடக்கிய அணி முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை ஓஎன்ஜிசி அணியும், 3-வது இடத்தை ஹெச்பிசிஎல் அணியும் கைப்பற்றின. மகளிருக்கான அணிகள் பிரிவில் ஐஓசிஎல் நிறுவனத்தின் காஜல் குமாரி, பரிமளா தேவி, ஜெய, துபா சாஹர் ஆகியோரை உள்ளடக்கிய அணி முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை ஓஎன்ஜிசி அணியும், 3-வது இடத்தை இஐஎல் அணி யும் பிடித்தன.

மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக துபா சாஹரும் (ஐஓசிஎல்), தொடரின் சிறந்த வீராங்கனையாக ராஷ்மி குமாரியும் (ஓஎன்ஜிசி) தேர்வானார்கள். ஆடவர் பிரிவில் சிறந்த வீரராக யோகேஷ் பர்தேஷி (ஐஓசிஎல்), தொடரின் சிறந்த வீரராக னிவாஸ்(ஐஓசிஎல்) தேர்வு செய்யப்பட் டனர். ஒட்டுமொத்தமாக ஐஓசிஎல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2-ம் இடத்தை ஓஎன்ஜிசி பிடித்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் சிபிசிஎல் நிர்வாக இயக்குநர் அர்விந்த் குமார் மற்றும் இயக்குநர்கள் ராஜீவ் அய்லவாடி, கிருஷ்ணன், சங்கர், கே.ரமேஷ் (சிஜிஎம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x