Last Updated : 10 Dec, 2021 04:48 PM

 

Published : 10 Dec 2021 04:48 PM
Last Updated : 10 Dec 2021 04:48 PM

மீண்டும் ஒரே தவறை இந்திய பேட்ஸ்மேன்கள் செய்யக்கூடாது: விவிஎஸ் லட்சுமண் அறிவுறுத்தல்

விவிஎஸ் லட்சுமண் | கோப்புப்படம்

புதுடெல்லி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால், கடினமாக உழைக்க வேண்டும். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணி வரும் 17-ம் தேதி தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறது. அந்நாட்டுடன் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி செஞ்சூரியனில் நடக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில், “கடந்த முறை செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. கான்பூர் டெஸ்ட்டில் ரஹானே ஆட்டமிழந்த விதமும், மும்பையில் புஜாரா ஆட்டமிழந்த விதமும் ஒரே மாதிரியானவை. ஷுப்மான் கில் நன்கு செட்டில் ஆனபின் விக்கெட்டைத் தவறவிட்டார். நல்ல தொடக்கத்தை அளிப்பதும், அதைப் பெரிய ஸ்கோராக மாற்றுவதும் கடினமானது.

இந்திய அணி 5 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களுடன் விளையாடுகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இருக்கிறார், ஆல்ரவுண்டர் இருக்கிறார். ஆதலால் டாப் 5 வரிசையில் உள்ள பேட்ஸ்மேன்கள் அதிகமான நேரம் க்ரீஸில் இருந்து ஸ்கோர் செய்ய வேண்டும். ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும், எளிதாக விக்கெட்டை இழக்கவும் கூடாது. சிறந்த அணிக்குச் சிறப்பாக விளையாட நினைத்தால் அதாவது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடரை வெல்ல நினைத்தால், பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவது அவசியம்.

ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்தியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இருந்த அழுத்தத்தைச் சமாளித்து சதம் அடித்தார். அணி மீதிருந்த அழுத்தத்தை எளிதாகக் கையாண்டு சதம் அடித்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தார். 2-வது இன்னிங்ஸிலும் விரைவாக 5 விக்கெட் வீழ்ந்த பின்னும் ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். இரு இன்னிங்ஸிலும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் அருமையானது'' என்று லட்சுமண் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x