Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்கான 21 பேர் கொண்ட வலுவான அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்த வார இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஜனவரி 3-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கிலும், 3-வது டெஸ்ட் ஜனவரி 11-ம் தேதி கேப்டவுனிலும் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி 19-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி 21-ம் தேதியும், 3-வது ஒரு நாள் போட்டி 23-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெஸ்ட்தொடருக்கான 21 பேர் கொண்டவலுவான அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளரான டுவான் ஆலிவர் மீண்டும்அணிக்குள் கொண்டுவரப்பட்டுள் ளார். கடைசியாக அவர் 2019-ம்ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார். உள்ளூர் போட்டியில் 8 இன்னிங்ஸில் 28 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஆலிவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிளென்டன் ஸ்டுர்மேன், ப்ரீனெலன் சுப்ரயன், சிசண்டா மாகலா, ரியான் ரிக்கல்டன் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x