Last Updated : 04 Mar, 2016 09:22 AM

 

Published : 04 Mar 2016 09:22 AM
Last Updated : 04 Mar 2016 09:22 AM

வங்கதேசத்திடம் தோல்வி எதிரொலி: பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர்கள் கண்டனம்

வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தோல்வி யடைந்ததை தொடர்ந்து பாகிஸ் தான் அணிக்கு அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆசிய கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் வங்க தேசத்திடம் பாகிஸ்தான் அணி 5 விக் கெட் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தது. இந்த தோல்வியின் மூலம் ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறும் வாய்ப் பை அந்த அணி இழந்தது. கடந்த 10 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி சந்தித்துள்ள 7-வது தோல்வி யாகும் இது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், “வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் என்று நம்பியிருந்தேன். ஆசிய கோப்பையில் இருந்து இந்த வகையில் வெளியேறுவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித் துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக், “இந்த தொடரில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள்தான் சரியாக ஆடவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆடுகளத் தைப் பற்றி சரியாக கணிக்காமல் பாகிஸ்தான் ஆடியது. அன்வர் அலிக்கு பதிலாக ஷோயப் மாலிக் குக்கு பந்துவீச அதிகம் வாய்ப்பளித் திருந்தால் பாகிஸ்தான் ஜெயித் திருக்கும்” என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் அப்ரீடி எடுத்த முடிவுகள் தவறாக இருந்த தாக குற்றம் சாட்டியுள்ள சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல், “ஷோயப் மாலிக்கை 7-வது ஓவரிலேயே பந்து வீச அழைத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன்கள் ஜாவேத் மியாண்டட், முகமது யூசுப், ரஷித் லதீப் ஆகியோ ரும் பாகிஸ்தான் அணியை கண்டித்து கருத்துகளை வெளியிட் டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x