Published : 05 Dec 2021 04:35 PM
Last Updated : 05 Dec 2021 04:35 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஜாஸ் படேல் புதிய சாதனை

நியூஸிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் | கோப்புப்படம்

மும்பை


டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் முதல் இன்னிங்ஸில் 10 விக்ெகட்டுகளை வீழ்த்தி, சாதனையாளர்கள் பட்டியலில் கும்ப்ளே, ஜிம் லேக்கர் ஆகியோருடன் இணைந்தார். இந்நிலையில் ஒரு டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, நியூஸிலாந்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்து டிக்ளே செய்தது. 540 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் நியூஸிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது. 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்துள்ளது நியூஸிலாந்து அணி.

இதில் 2-வது இன்னிங்ஸில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்டில் 14 விக்ெகட்டுகளை படேல் கைப்பற்றினார். அஜாஸ் படேல் 225 ரன்கள் கொடுத்து 14 விக்ெகட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயான் போத்தமின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வகையில் 1980ம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் 106 ரன்களுக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஜாஸ் படேல் முறியடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சுழற்பந்துவீச்சாளர் என்ற வகையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஓ கீஃபே சாதனையா 70 ரன்களுக்கு 12 என்ற மைல்கல்லையும் அஜாஸ் படேல் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் பஸால் மெகமது, வேகப்பந்துவீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ், ஆலன் டேவிட்ஸன், ப்ரூஸ் ரீட், ஆலன் டொனால்ட், ஜெப் டைமைக் ஆகியோர் ஒரு டெஸ்ட் போட்டியி்ல் 12 விக்ெகட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x