

மத்திய நிதியமைச்சரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சீனிவாசன் திடீரென சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் முழு விவரம் தெரியவில்லை. இன்று மதியம் நிதியமைச்சக அலுவலகத்தில் சீனிவாசன், அருண் ஜெட்லியை சந்தித்து அரை மணி நேரம் உரையாடியுள்ளார்.
தனது அரசியல் பணி காரணமாக பிசிசிஐ துணைத் தலைவர் பதவியிலிருந்து இறங்கிய அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விசாரணையில் பிசிசிஐ ஒழுங்குக் குழுவின் தலைவராக இருந்தார் ஜெட்லி, இந்தக் காலக்கட்டத்தில்தான் ஸ்ரீசாந்த், அன்கீட் சவான் ஆகியோருக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டது.