Last Updated : 04 Dec, 2021 11:37 PM

 

Published : 04 Dec 2021 11:37 PM
Last Updated : 04 Dec 2021 11:37 PM

ஒரே நாளில் 16 விக்கெட்: அஜாஸ் படேல் புதிய மைல்கல்: 62 ரன்னில் சுருண்ட நியூஸி.: மாபெரும் வெற்றியை நோக்கி இந்திய அணி

மும்பையில் நடந்துவரும் இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் | படம் உதவி ட்விட்டர்

மும்பை


நியூஸிலாந்து அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளரும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டருமான அஜாஸ் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதற்கு முன் இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே,ஜிம் லேக்கர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியநிலையில் அவர்களுடன் அஜாஸ் படேலும் இணைந்துவிட்டார்.

முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பவுன்ஸரையும், சுழற்பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் 62 ரன்களில் சுருண்டது. இந்திய மண்ணில் ஒரு அணி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எடுத்த மிகக்குறைந்தபட்ச ஸ்கோராகும்.

பாலோ-ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை ஆடியது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 29 ரன்களுடனும், அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்திய அணி 332 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. 2-வுத நாளான இன்று மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 16 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன

இன்னும் 3நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் நாளை ஒருநாள் முழுமையாக பேட் செய்து மிகப் பெரிய இலக்கை நியூஸிலாந்துக்கு இந்திய அணி நிர்ணயிக்கும். அடுத்த இரு நாட்களில் இந்திய அணி வீர்கள் தங்களின் திறமையான பந்துவீச்சை வெளிப்படுத்தும் பட்சத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

முன்னதாக இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் ேசர்த்திருந்தது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், விருதிமான் சஹா 20 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். படேல் வீசிய 72-வது ஓவரில் 4-வது பந்தில் விருதிமான் சஹா 27 ரன்னிலும் அடுத்துவந்த அஸ்வின் அடுத்த பந்தில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.

7-வது விக்கெட்டுக்கு அக்ஸர் படேல், அகர்வால் கூட்டணி ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். அகர்வால் 310பந்துகளில் 150 ரன்களை எட்டினார், துணையாக ஆடிய அக்ஸர் படேல் 113 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் அரைசத்தை எட்டினார். 7-வது வி்க்கெட்டுக்கு இருவரும் 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அகர்வால் 150 ரன்களில் ஆட்டமிழந்தார்(4சிக்ஸர், 17பவுண்டரி). அடுத்த சிறிது நேரத்தில் அக்ஸர் படேல் 52 ரன்னில் படேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கடைசி வரிசை வீரர்களான ஜெயந்் யாதவ் 12, சிராஜ் 4 ரன்னில் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 109.5 ஓவர்களில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் 10 விக்ெகட்டுகளையும் கைப்பற்றினார். 47.5 ஓவர்கள் வீசிய படேல், 12மெய்டன் ஓவர்கள், 119ரன்கள் கொடுத்து 10 விக்ெகட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. யங், லாதம் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். சிராஜின் வீசிய 4-வது ஓவரில் துல்லியமான இன்கட்டரில் கோலியிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து யங் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் கேப்டன் லாதமுக்கு ஷாட் பந்தாக சிராஜ் வீசினார். லாதம் அதை தூக்கி அடிக்க முற்பட்டு அது ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நியூஸிலாந்தின் அனுபவ வீரர் ரோஸ் டெய்லரை ஒரு ரன்னில் அற்புதமான பந்துவீச்சில் போல்டாக்கினார். சிராஜ் வீசிய அந்த பந்து லென்த்தில் பிட்ச் ஆகி, டெய்லரை ஏமார்றி ஆஃப் ஸ்டெம்பை பதம்பார்த்தது. அதன்பின் வந்த பேட்ஸ்மேன்களை அஸ்வின், ஜெயந்த் யாதவ், படேல் பார்த்துக் கொண்டனர்.

அஸ்வின் ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசியதை சமாளிக்க முடியாத நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நிகோலஸ்(7) பிளன்டல்(8),சவுதி(0), சோமர்வில்லே(0) என வரிசையாக வெளியேறினர். ஜேமிஸன் 17 ரன்னில் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

28.1 ஓவர்களில் 62 ரன்களில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணியில் ஜேமிஸன், லாதம் இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

நியூஸிலாந்து அணி ஒரு கட்டத்தில் 10 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது அடுத்த 21 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 31 ரன்கள் வரை 4 விக்ெகட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 31 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியத்த ரப்பில் அஸ்வின் 8ஓவர்கள் வீசி 2மெய்டன் 8ரன்கள் கொடுத்து 4 வி்க்கெட்டுகளை வீழ்திதனார். சிராஜ் 3 விக்கெட்டுகளையும், படேல் 2 விக்கெட்டுகளையும் , யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x