Published : 02 Dec 2021 09:08 AM
Last Updated : 02 Dec 2021 09:08 AM

ரிச்சர்ட் ஹாட்லீ சாதனையை முறியடிப்பாரா அஸ்வின்? மும்பை டெஸ்டில் எதிர்பார்ப்பு

இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் | கோப்புப்படம்

மும்பை



மும்பையில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின், நியூஸிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை முறியடிக்கவாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீச்சாளர்களை வரிசைப்படுத்தினால் அதில் முக்கியமானவர் ரவிச்சந்திர அஸ்வின். ஒரு பந்துவீச்சாளர் தன்னுடைய பந்துவீச்சை ஒவ்வொரு போட்டியிலும் எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்பதற்கு அஸ்வின் மிகச்சிறந்த உதாரணம்.
பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அசைவுகள், ஷாட்கள் ஆகியவற்றை நுணுக்கமாகக் கண்டறிந்த அதற்கு ஏற்றார்போல் தனது பந்துவீச்சை மாற்றி வீசக்கூடியவர் அஸ்வின். அஸ்வின் ஒரு ஓவரில் வீசும் 6 பந்துகளும் நிச்சயம் 6 விதங்களாகவே இருக்கும்.

இதனால்தான் இந்திய ஆடுகளங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சென்று அஸ்வினால் கோலோச்ச முடிகிறது. அங்குள்ள பேட்ஸ்மேன்களையும் தனது பந்துவீச்சால் அஸ்வின் திணறடிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் சமீபத்தில் ஹர்பஜன் சிங்கின் சாதனையை அஸ்வின் முறியடித்தார். அடுத்ததாக மும்பையில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் ஹேட்லியின் சாதனையையும் முறியடிக்க அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீ இந்தியாவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அஸ்வின் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடி 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹேட்லியின் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள்தான் தேவை. நியூஸிாலந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினால் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை முறியடிப்பார்.

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன்சிங் பேடி 12 டெஸ்ட்களில் 57 விக்கெட்டுகளையும், எர்ரபள்ளி பிரசன்னா 10 டெஸ்ட்களில் 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக டிம் சவுதி 10 டெஸ்ட் களில் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x