

தரம்சலாவில் நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பு செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இதற்கான அதிகாரபூர்வ ஐசிசி அறிவிப்பு காத்திருப்பில் உள்ளது. மொஹாலி, பெங்களூருவை விட கொல்கத்தாவே சிறந்த இடம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தரம்சலாவில் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இமாச்சல முதல்வர் கூறியதாலும் பதான்கோட் தாக்குதலால் இங்கு போட்டி நடைபெறுவதை மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே பாதுகாப்பு பிரச்சினையினால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருவதை பாகிஸ்தான் அரசு நிலுவையில் வைத்துள்ளது.
உண்மையில் பாகிஸ்தான் அணி கொல்கத்தா வந்து பிறகு தரம்சலா செல்ல வேண்டும், ஆனால் தரம்சலாவில் போட்டியில்லை என்ற பட்சத்தில் அந்த அணி கொல்கத்தாவிலேயே தங்க வைக்கப்படும் என்று தெரிகிறது.
மார்ச் 22-ம் தேதி பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தை சந்திக்கிறது.