Published : 18 Mar 2016 09:45 AM
Last Updated : 18 Mar 2016 09:45 AM

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் டீசர் வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக் கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி- தி அன்டோல்ட் ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story) என்கிற இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைர லாக பரவிய நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள் ளது. இதில் தோனி, ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக வேலை பார்த்த காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

டிக்கெட் கலெக்டர் உடையில் அவர் ரயிலில் இருந்து இறங்கி வேகமாக நடந்து வருவது போன்ற காட்சியும், மழையில் நனைந்தபடி பிளாட்பார்ம் இருக்கையில் அமர்ந்து தன்னை கடக்கும் ரயிலை வெறுப்பாக பார்க்கும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன.

நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங்கும் சாக்‌ஷி வேடத்தில் கியாரா அத்வானியும் நடிக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 2-ம் தேதி படம் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x