பிரதான சுற்றில் இந்திய அணி

பிரதான சுற்றில் இந்திய அணி
Updated on
1 min read

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2வது டிவிஷன் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, மவுமா தாஸ், ஷாமினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்திய ஆடவர் அணி 3-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற் கடித்தது. ஆடவர் அணி கடைசி ஆட்டத்தில் ஸ்லோவேக்கியாவை எதிர்கொள்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in