இந்திய அணி வீரர்கள் பயந்துவிட்டார்கள்: இன்சமாம் உல் ஹக் கிண்டல்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் | கோப்புப்படம்
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் | கோப்புப்படம்
Updated on
2 min read

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடனான போட்டி தொடங்கும் முன்பே இந்திய அணி வீர்ரகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால், அவர்கள் பயந்துவிட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கிண்டலடித்துள்ளார்.

50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஐக்கியஅரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணியை வென்றது.

அதிலும் ஷாகீன் அப்ரிடியின் அற்புதமான பந்துவீச்சு, பாபர் ஆஸம், ரிஸ்வானின் மிரட்டலான பேட்டிங் போன்றவை இந்திய அணி்க்கு பெரும் சவாலாக அமைந்தன. இந்திய அணியின் வெற்றிக்கு எந்தவிதமான வாய்ப்புகளையும் தராமல் சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியின் தோல்வி, வீரர்களின் உடல்மொழி ஆகியவை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டாஸ் போடுவதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமும் வரும்போதிருந்தே, போட்டியை நடத்துவோர் நெருக்கடியில் இருப்பது தெரிந்தது.

என்னைப் பொருத்தவரை இந்தியர்கள் போட்டி தொடங்கும் முன்பிருந்தே பதற்றத்திலும், பயத்திலும் இருக்கிறார்கள். அவர்களின் உடல்மொழி, குறிப்பாக விராட் கோலியின் உடல்மொழியை டாஸ் போடும் பார்த்தால் அவர் பதற்றத்தில் இருந்தது தெரிந்தது.

ஆனால், இந்திய வீரர்களின் உடல்மொழியோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தனர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின்புகூட இந்திய அணி பதற்றத்தில் இல்லை எனக் கூறமுடியாது. ரோஹித் சர்மாவே நெருக்கடியில்தான் பேட்டிங் செய்தார். போட்டி தொடங்கும் முன்பிருந்தே இந்திய வீரர்கள் நெருக்கடியில் பதற்றத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதைப் போன்று இதற்கு முன் மோசமாக இந்திய அணி விளையாடியதே இல்லை. டி20 போட்டியில் இந்திய அணி சிறந்த அணி, அதில் சந்தேகமில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக இந்திய வீரர்களின் செயல்பாட்டைப் பார்த்தால், அவர்கள் தான் உலகக் கோப்பை வெல்லத் தகுதியானவர்கள் எனத் தோன்றும். ஆனால், பாகிஸ்தானுடனான போட்டி இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்த்தைக் கொடுத்து, பயத்தைக் கொண்டு சேர்த்தது.

பாகிஸ்தானுடன் இந்திய அணி தோல்வி அடைந்தது, சமூக வலைத்தளத்தில் பெரும் விமர்சனங்கள் வந்தன. ஒருவாரம் வரை இடைவெளி எடுத்துக்கொண்டு வந்தபோதிலும் நியூஸிலாந்தின் சான்ட்னர், சோதி பந்துவீச்சைக் கூட சமாளிக்க முடியவில்லை. இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார்கள், ஆனால், அழுத்ததம்தான் அவர்களை தோல்வியில் தள்ளியது

இவ்வாறு இன்சமாம் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in