

டி 20 உலக கோப்பையில் ஸ்காட் லாந்து அணியை 11 ரன்கள் வித்தியா சத்தில் ஜிம்பாப்வே அணி தோற் கடித்தது. சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மஸகட்ஸா 4 விக்கெட் வீழ்த்தினார்.
டி 20 உலக கோப்பை முதல் சுற்றில் நேற்று பி பிரிவில் இடம் பெற் றுள்ள ஜிம்பாப்வே அணி தனது 2வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே ஆட்டம் முடிவில் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. ஷீன் வில்லியம்ஸ் 36 பந்தில், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். ஷிபந்தா 4, மஸகட்ஸா 12, முட்டும்பாமி 19, ஷிகந்தர் ரஸா 9, வாலர் 13, சிக்கும்புரா 20 ரன்கள் எடுத்தனர். வெலிங்டன் மஸகட்ஸா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
148 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஸ்காட்லாந்து 19.4 ஓவரில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பெரிங்டன் 36, மாம்ஸன் 31, டேவி 24 ரன்கள் எடுத்தனர். முன்ஸே 8, கோட்ஷேர் 3, கிராஸ் 0, மஹ்கான் 9, லிஸ்க் 9, ஷாரிப் 1, டிரிப்பானோ 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். 4 விக்கெட் வீழ்த்திய ஜிம்பாப்வேயின் சுழற் பந்து வீச்சாளர் வெலிங்டன் மஸகட்ஸா ஆட்ட நாயகனாக தேர் வானார். 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி தனது 3வது ஆட்டத்தில் நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, ஹாங்காங் அணியை வீழ்த்தியி ருந்தது. இரண்டு வெற்றிகள் மூலம் அந்த அணி சூப்பர் 10 சுற்றில் நுழை வதற்கான வாய்ப்பை பிரகாசப் படுத்திக்கொண்டுள்ளது. அதே வேளையில் இரண்டு தோல்விகளை சந்தித்த ஸ்காட்லாந்து சூப்பர் 10 சுற்று வாய்ப்பை இழந்தது.
இன்றைய ஆட்டங்கள்
ஓமன் நெதர்லாந்து
இடம்: தர்மசாலா நேரம்: பிற்பகல் 3
வங்கதேசம் அயர்லாந்து
இடம்: தர்மசாலா நேரம்: இரவு 7.30
.