Published : 24 Nov 2021 08:03 AM
Last Updated : 24 Nov 2021 08:03 AM

நியூஸி.டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு பின்னடைவு; கே.எல்.ராகுல் விலகல்: புதிய வீரர் சேர்ப்பு 

கே.எல்.ராகுல் | கோப்புப்படம்

கான்பூர்


நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் இருவரும் இல்லை, முதல் டெஸ்டில் கேப்டன் கோலியும் விளையாடாத சூழலில் தற்போது அணியில் கே.எல்.ராகுலும் இல்லாதது பின்னடைவுதான். ராகுல் இடத்தை நிரப்ப பல வீரர்கள் இருந்தாலும் அனுபவமான வீரர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுள்ளது.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி தலைமைக்குப் பதிலாக துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பின் இந்திய அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கே.எல்.ராகுலின் இடதுகாலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் முதலில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் ஓய்வு அளிக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், மருத்துவப் பரிசோதனையில் இரு வாரங்கள் ஓய்வு தேவை. அப்போதுதான் டிசம்பர் மாதம் வரும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு தயாராக முடியும் எனத் தெரிவித்ததால், டெஸ்ட் தொடர் முழுவதிலிருந்தும் ராகுல் நீக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ராகுலுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் பிரித்விஷா, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டாலும் ஒரு போட்டியி்ல்கூட களமிறங்கவில்லை. ஆனால், இந்தத் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக களமிறங்கலாம் எனத் தெரிகிறது.

தற்போது இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் என்ற அடிப்படையில் சத்தீஸ்வர் புஜாரா, கேப்டன் ரஹானே இருவர் மட்டுமே உள்ளனர். ரோஹித் சர்மா, கோலி, ரிஷப் பந்த் மூவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இல்லை, கேஎல் ராகுலும் இல்லை என்பதால் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது

இந்திய டெஸ்ட் அணி:
அஜின்கயே ரஹானே(கேப்டன்), மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், விருதிமான் சாஹா, கே.எஸ்.பரத், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x