சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிவிஎஸ் யூரோகிரிப் பிரதான ஸ்பான்சர்: 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து

டிவிஎஸ் யூரோகிரிப் மற்றும் சிஎஸ்கே ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் (இடமிருந்து) பி. மாதவன், செயல் துணைத் தலைவர், விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு, சக்ரா லிமிடெட், அர்விந்த் சிங், தலைமை செயல் அதிகாரி, டிவிஎஸ் சக்ரா லமிடெட், கேஎஸ் விஸ்வநாதன், தலைமைச் செயல் அதிகாரி, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், சாய் பிரகாஷ், தலைவர் சந்தைப்பிரிவு.

Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)அணியின் பிரதான ஸ்பான்சராக டிவிஎஸ் யூரோ கிரிப் இருக்கும். இதற்கான ஒப்பந்தம் சக்ரா லிமிடெட் நிறுவனத்துக்கும், சிஎஸ்கே நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி டிவிஎஸ்  சக்ரா தயாரிப்பான யூரோகிரிப் 3 ஆண்டுகளுக்கு (2022 முதல் 2024 வரை) பிரதானஸ்பான்சராக இருக்கும். இந்தஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.100 கோடிஇருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் குழும நிறுவனம் பிரதான ஸ்பான்சராக இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டிவிஎஸ் யூரோகிரிப் நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் சிஎஸ்கே அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பல நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில் இனி டிவிஎஸ் யூரோகிரிப் லோகோ இடம்பெறும். இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் அதிக அளவு ரசிகர்களைக் கொண்டதாக சிஎஸ்கே விளங்குவது குறிப்பிடத் தக்கது.

சிஎஸ்கே அணி ஜெர்சியில் டிவிஎஸ் யூரோகிரிப் இடம்பெறு வதன் மூலம் இந்த பிராண்ட் மேலும் பிரபலமாகும் என்று டிவிஎஸ் சக்ரா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு செயல் துணைத் தலைவர் பி.மாதவன் தெரிவித்தார்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாக இந்த கூட்டணி அமையும் என்றும் மஞ்சள் நிற ஜெர்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேஎஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in