அஸ்வின், கோலிக்கு சியட் சிறந்த வீரர்கள் விருது

அஸ்வின், கோலிக்கு சியட் சிறந்த வீரர்கள் விருது
Updated on
1 min read

சியட் கிரிக்கெட் விருதுகளில் ஆண்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி தட்டிச் செல்ல, ஆண்டின் சிறந்த இந்திய வீரர் விருதை அஸ்வின் வென்றார்.

அஸ்வினுக்கு வி.வி.எஸ்.லஷ்மண் விருதை வழங்கினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் 1983-ல் உலகக் கோப்பையை வென்ற கபில் தலைமை அணியில் விளையாடியவருமான சையத் கிர்மானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

2013-14 கிரிக்கெட் சீசனில் அஸ்வினின் சாதனையைப் பற்றி லஷ்மண் கூறுகையில், “அஸ்வின் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவார் என்று நான் நினைக்கவிலை. துலீப் கோப்பை போட்டி ஒன்றில் அவர் பந்துகளை நான் முதன் முதலாக எதிர்கொண்டபோது இவர் ஒருநாள் போட்டிக்கான பவுலர் என்றே நினைத்தேன், ஆனால் அவர் பலவிதமான பந்து வீச்சு வகைகளைப் பயன்படுத்தி பேட்ஸ்மென்களைச் சுற்றி சுழல் வலையை பின்னியுள்ளார்” என்றார்.

ரஞ்சி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய ராபின் உத்தப்பாவுக்கு சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட்டது.

விருதுகள் விவரம் வருமாறு:

சிறந்த கிரிக்கெட் வீரர் - விராட் கோலி

சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் - ஷிகர் தவான்

சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர்-ஷாகிபுல் ஹசன்

சிறந்த டெஸ்ட் வீரர்- மிட்செல் ஜான்சன்

ரசிகர்கள் தேர்வு விருது- கிளென் மேக்ஸ்வெல்

சிறந்த இளம் வீரர் - விஜய் சோல் (மகாராஷ்டிரா)

சிறந்த உள்நாட்டு வீரர் - ராபின் உத்தப்பா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in