கொல்கத்தாவில் இன்று கடைசி டி 20: தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா?

கொல்கத்தாவில் இன்று கடைசி டி 20: தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா?
Updated on
1 min read

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என இந்திய அணி வசப்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடைசி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட், அவேஷ் கான், யுவேந்திர சாஹல், இஷான் கிஷன் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் கே.எல்.ராகுல், அக்சர் படேல், ரிஷப் பந்த், தீபக் ஷாகர் அல்லது புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் இலக்கை வெற்றிகரமாக துரத்தியிருந்தது. வெற்றி நடையை இன்றைய ஆட்டத்திலும் தொடருவதில் இந்திய வீரர்கள் முனைப்பு காட்டக்கூடும். நியூஸிலாந்து அணியை பொறுத்தவரை உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் போதிய ஓய்வில்லாமல் விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் 15 முதல் 20 ஓவர்களில் ரன்கள் குவிக்க திணறி வருகிறது. இந்த விஷயத்தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in