இந்தியாவின் மீதான அப்ரீடியின் காதல் வெட்கக்கேடு: மியாண்டட் கண்டனம்

இந்தியாவின் மீதான அப்ரீடியின் காதல் வெட்கக்கேடு: மியாண்டட் கண்டனம்
Updated on
1 min read

பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு அனுப்புவதற்கு அந்நாட்டு அரசு தயக்கம் காட்டி வந்தது. இந்த நிலையில் இந்தியா தரப்பில் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி கடந்த 12ம் தேதி இரவு கொல்கத்தாவுக்கு வந்தது.

நேற்றுமுன்தினம் செய்தி யாளர்கள் சந்திப்பில் பேசிய அப்ரீடி,

‘‘இந்தியாவில் ரசித்து விளையாடிய அளவுக்கு வேறு எங்கும் விளையாடியதில்லை. நான் எனது கிரிக்கெட் வாழ்க்கை யின் கடைசி கட்டத்தில் இருக்கி றேன். இந்தியாவில் விளையாடிய போது என் மீது காட்டப்பட்ட அன்பு என் வாழ்நாள் முழுவதும் எனது நினைவில் இருக் கும். இதுபோன்ற அன்பு பாகிஸ் தானில்கூட எங்களுக்கு கிடைத்த தில்லை’’ என்று கூறியிருந்தார்.

அப்ரீடியின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியாண்டட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது:

இதுபோன்று அறிக்கை விடுப வர்கள் நிச்சயம் அவமானப்பட வேண்டும். வெட்கக்கேடானது இது. நமக்கு இந்தியா என்ன அளித் துள்ளது. இந்தியாவில் இருந்தா லும் உண்மையே பேசவேண்டும். கடந்த 5 வருடங்களாக பாகிஸ் தான் கிரிக்கெட்டுக்கு இந்தியா அளித்தது என்ன? பாகிஸ்தான் அணிக்காகப் பல வருடங்கள் விளையாடிய எனக்கு, இது போன்ற எங்களது வீரர்களின் கருத்துகளைக் கேட்க அதிர்ச்சி யாகவும் மனதை காயப்படுத்து வதாகவும் உள்ளது.

பாகிஸ்தான் அணியின் வேலையே, இந்தியா சென்று சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாடுவதே. இதை தவிர்த்து இதுபோன்று தேவையில்லாத கருத்துகளை கூறுவதற்கு அல்ல. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது எப்படி பேச வேண்டும் என பாகிஸ்தான் வாரியம் வீரர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு மியாண்டட் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in