ஐசிசி வெளியிட்ட சிறந்த டி20 அணி: கேப்டன் பாபர் ஆஸம்

ஐசிசி வெளியிட்ட சிறந்த டி20 அணி: கேப்டன் பாபர் ஆஸம்
Updated on
1 min read

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையின் அடிப்படையில் தனது சிறந்த டி20 அணியின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துபாயில் நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

இந்த வெற்றி மூலம், டி20 சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது ஆஸ்திரேலியா. மேலும், தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐசிசி சிறந்த டி20 அணியின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஐசிசியின் சிறந்த டி20 அணியில் தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர், பாபர் ஆஸம், அசலாங்கா, மார்க்ரம், மொயின் அலி, ஹசரங்கா, ஆடம் ஸம்பா, ஹாசில்வுட், ட்ரெண்ட் போல்ட், நார்ட்யே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. ஐசிசி அணியில் இந்திய அணியைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in