

உலகக் கோப்பை போட்டியை முடித்து பிரேசிலை விட்டு புறப்படும் வரை ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலை தளங்களையும் பயன்படுத்தக் கூடாது என ரஷிய அணியினருக்கு அதன் பயிற்சியாளர் ஃபேபியோ கேப்பல்லோ உத்தரவிட்டுள்ளார்.
“உலகக் கோப்பையில் விளை யாடும் இந்த ஒரு மாதமும் வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது. சமூக வலைதங்களில் அவர்கள் ஏதாவது கருத்துகளை வெளி யிடும்போது தேவையில்லாத பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அதனடிப்படையிலேயே சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம் என எங்கள் வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்” என்றார்.