தர்மசாலாவில் நடைபெற இருந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தர்மசாலாவில் நடைபெற இருந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Updated on
2 min read

டி 20 உலக கோப்பையில் தர்மசா லாவில் நடைபெற இருந்த இந்தியா -பாகிஸ்தான் போட்டி பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

டி 20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 19ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெறும் என போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே பாக். தீவிர வாதிகள் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா கிரிக்கெட் மைதானம் அருகே இருப்பதால் இந்த போட்டிக்கு எதிர்ப்பு கிளம் பியது. இதையடுத்து இந்தியா-பாக். போட்டிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க முடியாது என இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ரா சிங் அறிவித்தார்.

இந்நிலையில் சில தினங் களுக்கு முன்பு தர்மசாலா வருகை தந்த பாக். மத்திய புலனாய்வு குழுவினர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையின் அடிப்படையில் இந்தியா-பாக். போட்டியை கொல் கத்தா, மொஹாலி, பெங்களூரு ஆகிய நகரங்களில் ஏதாவது ஒன்றில் நடத்த வேண்டும் என ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது. மேலும் செவ்வாய் அன்று இந்தியா புறப்பட வேண்டிய பாக். அணியின் பயணத்தையும் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ உடன் ஆலோ சனை நடத்திய ஐசிசி, இந்தியா-பாக். போட்டியை தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவுக்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி தலைமை செயல் அதிகாரி தேவ் ரிச்சர் டுசன் கூறும்போது, "பாதுகாப்பு கவலைகள், மக்கள் போராட்டம், இமாச்சல பிரதேச முதல்வரின் எச்சரிக்கை ஆகியவற்றை தொடர்ந்து இந்தியா-பாக். போட்டி கொல்கத்தாவுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது. திட்டமிட்டபடி 19ம் தேதி போட்டி நடைபெறும்.

இந்த போட்டிக்காக ஏற் கெனவே இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந் தவர்களுக்கு அதற்குரிய தொகை திரும்ப வழங்கப்படும். அல்லது வாய்ப்பிருக்கும் பட்சத்தில் கொல்கத்தா போட்டியை காண மாற்று டிக்கெட் வழங்கப்படும். போட்டி நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் பாது காப்பு வழங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

டி 20 உலக கோப்பையில் பாக். அணி தனது முதல் ஆட்டத்தில் 16ம் தேதி தகுதி சுற்றில் வெல்லும் அணியுடன் மோதுகிறது. முன்னதாக அந்த அணி 12 மற்றும் 14ம் தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் இரு பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்கிறது.

பாக். வரவேற்பு

இந்நிலையில் கொல்கத்தா வுக்கு போட்டியை இடமாற்றம் செய்ததை பாக். கிரிக்கெட் வாரியம் வரவேற்றுள்ளது. எனினும் இன்னும் அணியை அனுப்ப அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக பாக். வாரிய தலைவர் ஷாகார்யார் கான் கூறும்போது, "இந்திய அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு உத்தர வாதம் வழங்க வேண்டும். இதற்காக நாங்கள் எதுவும் காலக்கெடு விதிக்கவில்லை" என்றார்.

நாட்டுக்கு அவப்பெயர்

பிசிசிஐ செயலாளர் அணுராக் தாகூர் கூறும்போது, தர்மசாலாவில் போட்டியை நடத்த விடாமல் செய்து இந்திய நாட்டுக்கும் மாநிலத்துக்கும் கெட்ட பெயரை, காங்கிரஸ் தலைமையிலான இமாச்சல பிரதேச அரசு வாங்கி கொடுத்துள்ளது. இந்த செயல் நாட்டை பற்றிய தவறான எண் ணத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மாநில அரசு ஏற்படுத் திய எதிர்மறையான சூழ்நிலை ரசிகர்களுக்கும், ஆதரவளிப்பவர் களுக்கும், போட்டியை நடத்தும் நாட்டுக்கும் சரியானதாக இல்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in