டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை: சயத் முஸ்தாக்அலி போட்டியில் விதர்பா அணி சுழற்பந்துவீச்சாளர் புதிய வரலாறு

விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸய் கர்னேவார் | படம் உதவி ட்விட்டர்
விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸய் கர்னேவார் | படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read

சயத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸய் கர்னிவார் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

சயத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் திங்கள்கிழமை மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணி மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த விதர்பா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது.

223 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மணிப்பூர் அணியை 16.3ஓவர்களில் 55 ரன்களில் சுருட்டி 167 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் விதர்பா அணியின் ஆஃப் ஸ்பின்னர் அக்ஸய் கர்னிவார்தான் டி20 கிரிக்கெட்டில் புதிய உலகசாதனையையும், வரலாற்றையும் படைத்துள்ளார். கர்னேவார் 4 ஓவர்கள் வீசி, 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டி20 கிரிக்கெட்டில் இதுவரை உலகளவில் எந்தப் பந்துவீச்சாளரும் 4 ஓவர்களை முழமையாக மெய்டனாக வீசி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதாக வரலாறு இல்லை. இதை முதன் முதலில் கர்னிவார்தான் செய்துள்ளார். ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ள கர்னேவாரை கேப்டன் கோலி ஒரு போட்டியில்கூட பயன்படுத்தவில்லை

இந்தப் போட்டியோடு கர்னிவாரின் சிறந்து பந்துவீச்சு நிற்காமல் நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. சிக்கம் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் விதர்பா அணி 206 ரன்கள் குவித்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிக்கம் அணியை 75 ரன்களில் சுருட்டி 130 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வென்றது.

இந்த ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் கர்னேவார் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மணிப்பூர் பேட்ஸ்மேன்கள் கோடான்டா அஜி்த் கார்த்திக், கிராந்தி குமார், ஆஷிஸ் தப்பா ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை கர்னேவார் வீழ்த்தினார். கர்னேவார் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கர்னேவார் 5 போட்டிகளில் 10 விக்ெகட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தற்போது பிளேட் குரூப்பில் இருக்கும் விதர்பா அணி 5 போட்டிகளில் மோதி அனைத்திலும் வென்று முதலிடத்தில் இருக்கிறது, மேகலாயா 2-வது இடத்திலும்திரிபுரா 3 வது இடத்திலும் உள்ளன.

மணிப்பூர் அணிக்கு எதிராக 4மெய்டன்கள் வீசி 2 விக்கெட் வீழ்த்தியது குறித்து கர்னேவார் கூறுகையில் “ உண்மையில் அந்தப் போட்டியில் ஒரு ரன்கூட கொடுக்காமல் நான் பந்துவீசியதை நினைத்தாலே நம்மமுடியாதவகையில் இருக்கிறது. ஒரு ரன் கொடுக்காமல் 4 ஓவர்களைவீசிய 2விக்கெட்டுகளையும் நான் வீழ்த்தியது மிகப்ெபரியசாதனையாகவே நினைக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in