Last Updated : 09 Nov, 2021 01:17 PM

Published : 09 Nov 2021 01:17 PM
Last Updated : 09 Nov 2021 01:17 PM

பிராட்மேனாகக் கூட இருக்கட்டும் அதனால்என்ன? பெட்ரோல் போட்டு இயக்க வீரர்கள் வாகனம் இல்லை: ரவி சாஸ்திரி பேட்டி

ரவி சாஸ்திரி | கோப்புப்படம்

துபாய்


பயோ-பபுள் சூழல் மிகவும் அழுத்தம் தரக்கூடியது. இந்த சூழலில் நீண்டகாலம் ஜாம்பவான் பிராட் மேன் இருந்தால்கூட அவரின் பேட்டிங் சராசரி குறையக்கூடும் என்று இ்ந்திய அணியி்ன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரிக்கு டி20 உலகக் கோப்பைத் தொடருடன் ஒப்பந்தம் முடிந்தது. புதிய பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக தொடங்கும் டி20, டெஸ்ட் தொடரிலிருந்து திராவிட் பொறுப்பேற்க உள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர்-12 சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. துபாயில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

இந்நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று காணொலி வாயிலாக செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய அணியினர் ஏறக்குறைய 6 மாதங்களாக பயோ-பபுள் சூழலில் இருக்கிறார்கள். பெரும்பாலான வீரர்கள் 3 பிரிவு கிரிக்ெகட்டும் விளையாடக்கூடியவர்கள். கடந்த 2 ஆண்டுகளில் வீர்ரகள் அதிகபட்சமாக 25 நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் செலவிட்டுள்ளார்கள்.

நீங்கள் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, உங்கள் பெயர் பிராட் மேனாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கூட பயோ-பபுள்சூழலுக்குள் வந்தால், அவரின் பேட்டிங் சராசரி குறைகக்கூடும். ஏனென்றால், நீங்கள் உயிருள்ள மனிதர்.

உங்கள் பின்னால் பெட்ரோல் ஊற்றிவிட்டு, உங்களை இயக்குவதற்கு நீங்களும், வீரர்களும் வாகனங்கள் கிடையாது. அப்படி செயல்படவும் முடியாது. பயோபபுள் கடினமானது. இதை அனைத்ைதயும் கடந்துதான் இந்திய அணியினர் பலவெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். எந்தப்புகாரும் இப்போது இல்லை, ஆனால் விரைவில் பபுளில் தங்குவது பெரிய சர்ச்சையாகும், கவனம் தேவை.

வீரர்களுக்கு ஓய்வு கொடுங்கள் என்று பிசிசிஐ அமைப்பிடம் கேட்பது என்னுடைய பணி அல்ல. ஐசிசி உலகக் கோப்பைப் போன்ற பெரிய போட்டித் தொடருக்கு முன், வீரர்களுக்கு ஓய்வு தேவை, இடைவெளி தேவை என்பதை பிசிசிஐ நிர்வாகிகளுக்குத் தெரியுமே. அவ்வாறு இருந்தால், வீரர்கள் அனைவரும் மனரீதியாக உற்சாகமாக இருந்து விளையாடுவதற்கு தயாராக இருப்பார்கள். அனைத்து வீரர்களும் பேசுவதற்கு அணியில் உரிமையுண்டு, சீனியர், ஜூனியர் வீரர்கள் என்ற பாகுபாடு கிடையாது. என்னுடைய பயணத்தில் இது முக்கியமான மைல்கல்.

என்னுடைய பயற்சிக்காலத்தில் இந்திய அணி கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வகையான பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடினார்கள். ஒவ்வொரு வீரரின் செயல்பாட்டையும் பார்த்தோம், உலகளவில் தோற்கடிக்காத அணிகள் இல்லை என்று நிலைக்கு வந்து சிறந்த அணியாக ஒளிர்ந்தார்கள். நான் இந்திய அணிசிறந்தது எனச் சொல்லவில்லை, ஆனால், சிறந்த அணிகளுக்கான வரலாற்றில், சிறந்த அணி இந்தியா என்று கூறுகிறேன்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு சென்று வீர்ரகள் அச்சமில்லாம்ல விளையாடினார்கள், தோற்கடித்தார்கள். நீண்டகாலத்துக்குப்பின் இங்கிலாந்து சென்று அந்நாட்டு அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை சிறந்த பயணம்
இ்வ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x