நியூஸி. தொடர்: வெங்கடேஷ், கெய்க்வாட், சக்காரியாவுக்கு வாய்ப்பு?

வெங்கடேஷ், ருதுராஜ் கெய்க்வாட் | கோப்புப்படம்
வெங்கடேஷ், ருதுராஜ் கெய்க்வாட் | கோப்புப்படம்
Updated on
1 min read



நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் வெங்கடேஷ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பைப் போட்டித் தொடர் முடிந்தபின் இந்தியா வரும் நியூஸிலாந்து அணி நவம்பர் 17ம் தேதி முதல் 3 டி20 போட்டித் தொடர், 2 (நவ-25-29ம்தேதி, டிசம்3-7 2-வது டெஸ்ட்) டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தத் தொடருக்கு, இந்திய அணியில் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹி்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், ரோஹித் சர்மாவிடம் தேர்வுக்குழுவினர் கேட்டு ஆலோசித்தபின்புதான் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு எடுக்கிறேன், டி20 போட்டிக்கு தலைமை ஏற்கிறேன் என ரோஹித் சர்மா கூறினால், ரோஹித்திடம் கேப்டன் பதவி தரப்படும்.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் வெங்கடேஷ் அய்யர், ஆவேஷ் கான், சேத்தன் சக்காரியா ஆகியோரை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி நாளை மோதுகிறது. இந்த ஆட்டம் முடிந்தபின், செவ்வாய்கிழமை இந்திய அணியின் தேர்வாளர்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நியூஸிலாந்து தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in