

ஆடவர் டி 20 உலக்கோப்பை நடைபெறும் அதேவேளையில் மகளிருக்கான டி 20 உலகக் கோப்பை போட்டியும் நடைபெறு கிறது. மகளிர் உலகக்கோப்பை ஆட்டங்கள் வரும் 15ம் தேதி முதல் நடைபெறுகின்றன. இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து அணிக ளும், குரூப் பி பிரிவில் இங்கி லாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளும் கலந்து கொள்கின்றன.
ஆடவர் பிரிவில் ஒரு ஆட்டம் கூட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படாத நிலையில் மகளிர் பிரிவில் 4 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை ஆட்டங்கள் (மகளிர்)
மார்ச் 16: மே.இ.தீவுகள்-பாகிஸ் தான், மார்ச் 20: மே.இ.தீவுகள்-வங்கதேசம், மார்ச் 23: தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து, மார்ச் 27: இங்கிலாந்து-பாகிஸ்தான்.