

டி20 உலகக் கோப்பை போட்டியில், இலங்கை அணியுடனான தோல்விக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி இழந்தது.
நேற்று நடந்த லீக் போட்டியில், டாஸ் வென்ற மேற்கித்தியத் தீவுகள் அணி கேப்டன் பொலார்ட் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
பாதும் நிசன்கா 51 ரன்களும், சாரித் அசலன்கா 68 ரன்கள் குவித்து இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் எடுக்க உதவினர். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர்.
லெக் ஸ்பின்னர் ஹசரங்காவின் சிறப்பான பந்து வீச்சால், பொலார்ட், பிராவோ போன்ற முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஹெட்மேயர், பூரன் ஆகியோர் சிறப்பாக ஆடி மேற்கிந்தியத் தீவுகள் அணி ரன்கள் சேர்க்க உதவினர்.
எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் இலங்கையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கத்தியத் தீவுகள் அணி தோல்வி அடைந்தது. மேலும், இந்தத் தோல்வி மூலம் டி20 சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பையும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது.