Published : 01 Mar 2016 06:14 PM
Last Updated : 01 Mar 2016 06:14 PM

ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளராக திராவிட் நியமனம்

இந்திய அண்டர் 19 அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற ராகுல் திராவிட், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவருடன் ராகுல் திராவிட் தற்போது இணைந்து பணியாற்றவிருக்கிறார்.

முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பிரவீண் ஆம்ரே (பேட்டிங் பயிற்சியாளர்கள்), முன்னாள் தமிழக வீரரும் டெல்லி அணியின் பவுலிங் ஆலோசகருமான டி.ஏ.சேகர் ஆகியோருடன் திராவிட் இணைந்து பணியாற்றவிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இதே ராகுல் திராவிட், அப்டன், பரூச்சா ஆகியோரே இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

அப்டன் டி20 வடிவத்தில் ஒரு பெரிய பயிற்சியாளராகக் கருதப் படுபவர், காரணம் ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீகில் சாம்பியன்களான சிட்னி தண்டர் அணியின் பயிற்சியாளர் அப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x