Published : 29 Oct 2021 05:08 PM
Last Updated : 29 Oct 2021 05:08 PM

உடற்தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவை அணியில் தேர்ந்தெடுத்தமைக்கு யார் பொறுப்பேற்பது: சந்தீப் பாட்டீல் கேள்வி

ஹர்திக் பாண்டியா | கோப்புப்படம்

புதுடெல்லி



உடற்தகுதியில்லாத இல்லாத நிலையில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஹர்திக் பாண்டியாவை டி20உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்ததற்கு யாராவதுபொறுப்பேற்கவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே பந்துவீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். கடந்த ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து இந்திய அணியில் பாண்டியா இடம் பெற்றும் எந்தப் போட்டியிலும் மேட்வின்னிங் ஆட்டம் ஆடவில்லை,பந்துவீசவும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசவில்லை.

இந்நிலையி்ல் உடற்தகுதியில்லாத நிலையில் ஆல்ரவுண்டர் வரிசையில் டி20உலகக் கோப்பைக்கான இந்திய அணியல் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் தோள்பட்டையில் அடிவாங்கி பீல்டிங் செய்ய வராமல் சென்றார். அதன்பின் ஸ்கேன் செய்துபார்த்தபோது அவருக்கு காயம் ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.

இந்நிலையில் சர்வதேச போட்டியில் விளையாடும் ஒருவீரர் 100 சதவீதம் உடற்தகுதியில்லாத நிலையில் எவ்வாறு அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முன்னாள் வீர்ர சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.


ஆங்கில நாளேட்டில் சந்தீப் பாட்டீல் எழுதிய கட்டுரையில் “ 100 சதவீதம் உடற்தகுதியில்லாத ஒரு வீரரை எவ்வாறு உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுத்தார்கள். ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததற்கு முழுமையாக கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ ஆகியவற்றுக்கு மட்டுமே தெரியும். அடிப்படையில் ஒரு வீரர் 100 சதவீதம் உடற்தகுதியில்லாவிட்டால், அதை தேர்வாளர்களிடம் விட்டுவிடவேண்டும். ஐபிஎல் முழுவதும் ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்பதால் தேர்வுக்குழுவினர்அது குறித்து முடிவுஎடுத்திருக்க வேண்டும். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவைச் சேர்ப்பதற்கு முன் அவருக்கு உடற்தகுதிசான்றைக் கேட்டிருக்க வேண்டும்.

ஹர்திக் பாண்டியா அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு யாரேனும் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை இந்தியப் பயிற்சியாளரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. பாண்டியா உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று ரோஹித் சர்மா, ரஹானே சொல்கிறார்கள். போட்டியின் போது ஒருவர் உடற்தகுதியில்லாமல் போகும் வீரர் ஒருவரை எவ்வாறு உடற்தகுதியுடன் உள்ளார் எனக் கூற முடியும். இது உலகக் கோப்பை, சாதரணத் தொடர் அல்ல, அல்லது போட்டியும் அல்ல.

இவ்வாறு சந்தீப் பாட்டல் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த 2 நாட்களாக ஹர்திக் பாண்டியா பந்துவீசி பயிற்சி எடுத்துவருகிறார் அதற்குரிய வீடியோ காட்சிகளை பிசிசிஐ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. நாளைமறுநாள் நடக்கும் இந்தியா, நியூஸிலாந்து ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாகும். இதில் இந்திய அணி தோல்வி அடைந்தால் மூட்டை முடிச்சுகளை கட்ட வேண்டியதிருக்கும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x