ஹர்பஜன் சிங் - முகமது அமீருக்கு இடையே எல்லை மீறிய வாக்குவாதம்

ஹர்பஜன் சிங் - முகமது அமீருக்கு இடையே எல்லை மீறிய வாக்குவாதம்
Updated on
1 min read

இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும், பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கும் இடையே ட்விட்டரில் நடந்த வாக்குவாதம் இரு நாட்டு ரசிகர்களிடத்திலும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது.

டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் துபாயில் நடந்தது. பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதனைக் குறிப்பிட்டு இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ஆசியக் கோப்பையில் முகமது அமீர் பந்தில், தான் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த வீடியோவைப் பதிவிட்டார்.

பதிலுக்கு இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 4 பந்தில், 4 சிக்ஸர்களை ஷாகித் அப்ரிடி அடித்த வீடியோவை அமீர் பகிர்ந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீண்டது. இந்த வாக்குவாதம் இரு நாட்டு ரசிகர்களிடத்திலும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in